அனல் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி இருப்புக்களை பெற்றுக்கொள்ளத் தவறியதால், இலங்கையில் மிக மோசமான மின்வெட்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் வரலாம் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் நிஹால் வீரரத்ன தெரிவித்தார்.
“இந்த ஆண்டு மழை குறைவாக இருந்ததால் எங்கள் நீர் மின் உற்பத்தி திறன் போதுமானதாக இருக்காது. இருப்பினும் அனல் மின்சாரம் வழங்க, தேவையான நிலக்கரி இருப்புகளைப் பெறுவதற்கு இலங்கை போராடி வருகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மோசமான மின்வெட்டுக்கள் ஏற்படலாம். கடந்த யூலையில் மின்வெட்டுக்கு முன்னதாகவே நாங்கள் அதை கணித்து அறிவித்திருந்தோம்” என்று வீரரத்ன கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1