WWE நட்சத்திரம் மாண்டி ரோஸ், ஒன்லைனில் தனது நிர்வாணப் படங்களை வெளியிட்டதற்காக WWE மல்யுத்த நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
32 வயதான ரோஸ், தனது ஃபேன்டைம் பக்கத்தில் தொடர்ச்சியாக நிர்வாண படங்கள் மற்றும் வீடியோ க்களை வெளியிட்டதற்காக நீக்கப்பட்டார்.
அவர் நீக்கப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு வரை NXT பிரிவில் சாம்பியனாக இருந்தார். அவர் நீக்கப்படும் செய்தி வெளியாவதற்கு சில மணி முன்னதாகவே, ரோக்ஸான் பெரெஸ் உடனான போட்டியில் பட்டத்தை இழந்தார்.
ரோஸ்,”அவரது WWE ஒப்பந்தத்தின் எல்லைகளை மீறியதால், நிறுவனத்தின் அதிகாரிகள் அவரை விடுவிக்க முடிவு செய்தனர்“ என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 412 நாட்கள் NXT சாம்பியனாக இருந்த ரோஸ், பட்டத்தை இழந்ததைத் தொடர்ந்து ரசிகர்களின் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்து, தனது விலக்கல் பற்றிய செய்திகள் வெளிவருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு ட்விட்டரில் செயலில் இருந்தார்.
ஒன்லி ஃபேன்ஸ் மற்றும் ட்விட்ச் போன்ற தளங்களுடனான மூன்றாம் தரப்பு ஒப்பந்தங்கள் மீதான தடையை WWE சமீபத்தில் நீக்கிய பின்னர், WWE மல்யுத்த வீரர்கள் இப்போது மூன்றாம் தரப்பு தோற்றங்களைச் செய்ய முடிகிறது. எனினும், தடைநீக்கப்படாத தளமொன்றில் ரோஸ் நிர்வாண படங்களை பகிர்ந்ததே சிக்கலாகியுள்ளது.