2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான கல்வி வகுப்புகளை நடத்துவதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை ஞாயிற்றுக்கிழமை நிறைவடையும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கான கல்வி வகுப்புகளை பரீட்சை முடியும் வரை நடத்த முடியாது.
வகுப்புகளை நடத்துதல், பட்டறைகள், மாநாடுகள், விரிவுரைகள், மாதிரி தாள்களை அச்சிடுதல், சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், அச்சு அல்லது சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்தல் போன்றவை இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.




