டிசெம்பர் 10ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் சொகுசு கார் மோதியதில் முச்சக்கரவண்டியின் சாரதியொருவர் உயிரிழந்திருந்தார். இதை தொடர்ந்து, காரில் பயணித்த பெண்ணொருவரை நடு வீதியில் உருட்டி உருட்டி அடித்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
26 வயதான தொழிலதிபர் இரவு விடுதியில் சந்தித்த 3 பெண்களை ஏற்றிக் கொண்டு சொகுசு காரில் பயணித்த போது விபத்து நடந்தது. காரில் பயணித்த அனைவரும் மதுபோதையில் இருந்தனர்.
விபத்தையடுத்து காரை செலுத்திய சாரதி தப்பியோடி விட்டார். அவர் அன்றைய தினமே டுபாய்க்கு தப்பியோடினார். பின்னர் நாடு திரும்பிய போது கைதானார்.
காரில் பயணித்த பெண்ணொருவரை நடு வீதியில் உருட்டு உருட்டி தாக்கிய குற்றச்சாட்டில் துப்புரவு தொழிலாளர்களான இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு பெண்ணை பொலிசார் தேடுகிறார்கள்.
அவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 071 – 859 15 78 என்ற இலக்கத்திற்கு கொழும்பு தெற்கு ASP, 071 – 859 15 79 என்ற இலக்கத்தில் கொள்ளுப்பிட்டி OIC அல்லது 0744 – 859 என்ற இலக்கத்திற்கு கொள்ளுப்பிட்டி போக்குவரத்து OIC க்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி, SSP நிஹால் தல்துவ பொதுமக்களிடம் கோருகின்றார்.