நடிகர் விஜய் சேதுபதி, இப்போது தமிழ், இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. சமீப காலமாக அவர் உடல் எடை அதிகரித்திருப்பதாக கூறப்பட்டது. அவர் நடித்த ‘விக்ரம்’, ‘டிஎஸ்பி’ படங்களில் அவர் உடல் எடையும் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், உடல் எடையைக் கணிசமாகக் குறைத்து புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1