26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

கோட்டா பீதியடையாமல் இன்னும் சில நாள் சமாளித்திருந்தால் பிரச்சினையை தீர்த்திருக்கலாம்: பசில்!

இலங்கை மக்களின் நலனுக்காக தனது இரட்டைக் குடியுரிமையை தியாகம் செய்வதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதியுறுவதாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய பசில் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மக்களுக்காக தியாகம் செய்ததாகவும், ஆனால் அதன் விளைவாக துன்பங்களை அனுபவித்ததாகவும் கூறினார்.

இதேபோன்ற தியாகத்தை பசில் செய்வாரா என வினவியபோது, அந்த நேரத்தில் தேவை ஏற்பட்டால் தனது இரட்டை குடியுரிமையை கைவிடுவதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

“தேவை ஏற்படும் போது செய்வேன். எனினும், தற்போது அவ்வாறான தேவை இல்லை” என பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவர் தனது குடியுரிமையைத் துறப்பாரா அல்லது இது தொடர்பாக அரசியலமைப்பு விதிகளைத் திருத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பயன்படுத்துவாரா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, ​​அது சாத்தியமாகும், ஆனால் தற்போதைய தேவையின் அடிப்படையில் செயல்படத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி பீதி அடையாமல் இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்திருந்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்த்திருக்க முடியும் எனவும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

Leave a Comment