கிழக்கு மாகாணத்தில் ஒரு வாரத்திற்கு மாடு அறுக்க தடை: இறைச்சிக்கடைகள் பூட்டு!

Date:

மட்டக்களப்பு அக்கரைப்பற்று முதல் கல்முனை நகரசபைகள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் (கோழிக் கடைகள் தவிர) இன்று (12) முதல் ஒரு வார காலத்திற்கு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களம் இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றினை குறிப்பிட்டு மட்டக்களப்பு, அக்கரைப்பற்று மற்றும் கல்முனை நகரசபை பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் (கோழிக் கடைகள் தவிர) இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஒருவாரத்திற்கு மாடுகள் அறுக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அண்மையில் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட கடும் குளிர் காலநிலை காரணமாக பல இடங்களில் பெரும் எண்ணிக்கையிலான கால்நடைகள் உயிரிழந்தமை தொடர்பில் பல செய்திகள் வெளியாகி இருந்தன.இதனை தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவிற்கமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏலவே வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும் எண்ணிக்கையிலான கால்நடைகள் உயிரிழந்தமைக்கான காரணத்தைக் கண்டறிய இரசாயன பகுப்பாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் மாட்டிறைச்சி ஆட்டிறைச்சியைக் கொண்டு செல்ல உடனடித்தடை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது

spot_imgspot_img

More like this
Related

தலை துண்டிக்கப்படுவதற்கு முன் ஈரானுக்கு கடைசி வாய்ப்பு வழங்கியுள்ளோம்: ட்ரம்ப்

தெஹ்ரான் மறுத்தபோதிலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், "தலை துண்டிக்கப்படுவதற்கு முன் இதுவே...

நுவரெலியாவில் 6 பேர் மாயம்

நுவரெலியாவில் பெய்த கனமழை மற்றும் வானிலை தொடர்பான சம்பவங்களால் மாவட்டம் முழுவதும்...

ஹட்டன் மண்சரிவில் 4 பேர் மாயம்

ஹட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்