26 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

கால்நடைகளில் கரிசனை கொள்ளுங்கள்: வடக்கில் 300 இற்கும் அதிக கால்நடைகள் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்திலும் கால்நடைகள் பல உயரிழந்துள்ளன.

நேற்று வீசிய பலத்த காற்று மற்றும் குளிர்காரணமாக வடக்கு மாகாணத்தில் 300ற்கும் மேற்பட்ட மாடுகளும் 180ற்கும் மேற்பட்ட ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரி சங்க வைத்தியர் ச. சுகிர்தன் தெரிவித்தார்.

அதேவேளை யாழ் மாவட்டத்தில் 80ற்கும் மேற்பட்ட ஆடுகளும் 20 தொடக்கம் 30ற்கு மேற்பட்ட மாடுகளும் உயிரிழந்துள்ளன.

மழையுடன் கூடிய குளிரான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என்பதால் கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை மிகவும் அவதானமாக பாதுகாக்குமாறும் இவ் இறப்பு இன்னும் கூடலாம் என வைத்திய அதிகாரி தெரிவித்துக் கொண்டார்

குறிப்பாக நாய்கள் பூனைகள், கோழிகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகள்மற்றும் கால்நடைகள் ஆகியவற்றையும் பாதுகாப்பான கொட்டில்களில் தங்க வைத்து குளிர் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மருதங்கேணி LB Finance ஊழல் சம்பவம் தொடர்பாக ஊழியர்கள் மீது அழுத்தம்!

east tamil

ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

east tamil

தோட்டத் தொழிலாளருக்கு ரூ.2000 அடிப்படை சம்பள உயர்வு கோரிக்கை: மனோ கணேசன் எம்.பி

east tamil

பச்சையரிசி மற்றும் தேங்காய் விலை குறைப்புக்கான கோரிக்கை – இராதாகிருஸ்ணன்

east tamil

நாட்டு நலனுக்காக மாற்றியமைக்கப்பட்ட 77வது சுதந்திர தினம்

east tamil

Leave a Comment