கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் 20 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் 40 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலிசாரால் இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமான மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1