தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய அவர், சீரியல் மூலம் பிரபலமாகி தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார்.
‘மேயாத மான்’ தொடங்கி ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மாஃபியா’, ‘ஓ மணப்பெண்ணே’, ‘மான்ஸ்டர்’, ‘யானை’, ‘குருதி ஆட்டம்’ என பல படங்களில் நடித்துவிட்டார். அவரது நடிப்பில் அடுத்து ‘இந்தியன் 2’ ‘பொம்மை’, ‘அகிலன்’, ‘ருத்ரன்’, ‘பத்து தல’, ‘டிமான்ட்டி காலனி 2’ போன்ற படங்கள் வெளியாக உள்ளன.
இதனிடையே, தற்போது தனது காதலரை வெளிப்படுத்தியுள்ளார் பிரியா பவானி சங்கர். இன்ஸ்டாகிராமில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், அந்த பதிவில், “18 வயதில் ஒன்றாக கடற்கரைக்குச் சென்று, சந்திரனைப் பார்த்துக்கொண்டு, இங்கே ஒரு வீடு வேண்டும் என்ற கனவில் நாங்கள் இதேபோல் மாலைப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தோம். தற்போது அந்தக் கனவின்படி, எங்கள் புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.