அரியவகை இனமான மீன்பிடி பூனை (FISHING CAT ) ஒன்று திருகோணமலை மூதூர் 64 ஆம் கட்டை ஜபல் நகர் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது.
இது வன ஜீவராசிகள் திணைக்களத்தி ஒப்படைக்கப்பட்டது.
மேலும் இப்பகுதியில் நீண்ட காலமாக வீடுகளில் உள்ள கோழி உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் பொதுமக்களினால் கடந்த டிசம்பர் 2 திகதி அன்று பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப்பூனையினால் தாம் பல்வேறு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இந்த மீன்பிடிப் பூனை இலங்கையில் கொடுப்புலி என அழைக்கப்படுவதுடன் ஒரு நடுத்தர காட்டுப்பூனையாக குறிப்பிடப்படுகின்றது. இவை தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன.
-பாறுக் ஷிஹான்-
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1