பிரபாஸ் மற்றும் க்ரித்தி சனோன் ஆகியோர் காதலித்து வருவதாக பரவிய தகவல் பொய்யானது என சமீபத்தில் உறுதியானது. க்ரித்தி சனோன் அதை பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
எனினும், இந்த விவகாரத்தில் ஒரு திருப்பமாக, இந்த வதந்தியை தொடர்ந்து, இருவரையும் இணைத்து வைக்கலாமா என இரு குடும்பங்கள் தரப்பிலும் யோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரு குடும்பங்களும் இது பற்றி பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபாஸ் ஆந்திராவின் ராஜு என்று அழைக்கப்படும் க்ஷத்ரிய சாதியை சேர்ந்தவர். மறுபுறம், க்ரிதி சனோன் பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்த பெண்.
தற்போது க்ரித்தி சனோனுக்கு 32 வயதாகிறது. பிரபாஸுக்கு 43 வயதாகிறது.
இதற்கிடையில் பிரபாஸ் தனது சகோதரிகளின் மகள்களுக்கும் திருமணம் செய்ய மாப்பிள்ளை தேடும் படலத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்குள் பிரபாஸுக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் யோசித்து வருகின்றனர்.