சிறகுகள் அமைப்பு ஏற்பாடு செய்த அனைத்துலக மண் தினம் பற்றிய கலந்துரையாடலும், பாதீனியம் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் அங்குரார்ப்பணம் செய்யும் கலந்துரையாடலானது பலாலி வீதி கோண்டாவிலில் அமைந்துள்ள எழுதிரள் பணிமனையில் இன்று காலை 9 மணிமுதல் 12 மணி வரை இடம்பெற்றது.
இதில் முன்னாள் வடமாகாண விவசாயத்துறை அமைச்சரும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவருமான ஐங்கரநேசன், பல்வேறு சமூக சேவை அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அங்கத்தவர்கள் மற்றும் சூழல் நேயப் பணியாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இக் கலந்துரையாடலில் தற்போது பெருகி வரும் பாத்தீனியத்தை முற்றாக அழிக்கும் முகமாக பொதுக் கட்டமைப்பின் தேவை கருதி “பாதீனிய ஒழிப்பு இயக்கம்” எனும் பெயரில் செயற்திட்ட அமைப்பு உருவாக்கப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் இக் கட்டமைப்பானது முதல்கொண்டு அனைத்து சமூக மட்ட அமைப்புக்களுடனும் இணைந்து பாதீனிய ஒழிப்பு செசயற்திட்டத்தை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.