கொக்குவில் சம்பியன் லீக் தொடரின் வெற்றிக் கிண்ணத்தை பெற்பதி கர்ஜிக்கும் சிங்கங்கள் தனதாக்கியுள்ளது.
கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் கொக்குவில் ஸ்பார்டன்ஸ் அணியை தொற்கடித்து கர்ஜிக்கும் சிங்கங்கள் அணி இந்த வெற்றியை பெற்றுக் கொண்டுள்ளது.
கொக்குவில் பகுதியில் வசிக்கும் விளையாட்டு வீரர்களை உள்ளடக்கி நடத்தப்பட்ட இத் தொடர் கடந்த மாதம் 12 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. 8 அணிகள் பங்குற்றிய இத் தொடரின் இறுதிப் போட்டிக்கு பெற்பதி கர்ஜிக்கும் சிங்கங்கள் அணியும், கொக்குவில் ஸ்பார்டன்ஸ் அணியும் தெரிவாகியிருந்தன.
இதன்படி நேற்று சனிக்கிழமை இவ்விரு அணிகளும் மோதிக் கொண்ட இறுதிப் போட்டி நிகழ்வுகள் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதான்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்ட யாழ்.மாநக முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் ஆகியோர் போட்டியை ஆரம்பித்து வைத்தனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கர்ஜிக்கும் சிங்கங்கள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடப்பெடுத்தாடிய ஸ்பார்டன்ஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 10 பந்துப்பரிமாற்றங்களில் 98 ஓட்டங்களை பெற்றது.
99 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கர்ஜிக்கும் சிங்கங்கள் நிருஜனின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் வெற்றி இலக்கை எட்டி கிண்ணத்தை தனதாக்கியது.
வெற்றி பெற்ற அணிக்கான கிண்ணத்தை நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் வழங்கி வைத்தார்.
இப் போட்டியின் ஆட்ட நாயகணாக 49 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிருஜன் தெரிவு செய்யப்பட்டார். மேலும் தொடர் ஆட்ட நாயகணாக பிரதீஸ் தெரிவு செய்யப்பட்டார்.