உலகின் முதல் குறுஞ்செய்தி (text message) அனுப்பப்பட்டு நேற்று (3) 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
1992 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி இங்கிலாந்தில் வோடபோன் பொறியாளர் ஒருவர் அனுப்பிய “மெர்ரி கிறிஸ்மஸ்” என்பதே கன்னி குறுஞ்செய்தியாகும்.
மென்பொருள் பொறியியலாளர் நீல் பாப்வொர்த் கிறிஸ்துமஸ் விருந்தில் இருந்த தனது சக ஊழியர் ரிச்சர்ட் ஜார்விஸுக்கு அனுப்பியதே, குறுஞ்செய்தி வரலாற்றின் தொடக்கமாகும்.
இன்று செய்திகள் வடிவத்தில் நிறைய மாறிவிட்டது. வட்ஸ்அப் போன்ற மெசஞ்சர் ஆப்களின் வருகையால் குறுஞ்செய்திகளை அனுப்புவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இன்று, குறுஞ்செய்திகள் பெரும்பாலும் நெட்வொர்க் சேவை வழங்குநர்கள் மற்றும் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களால் அனுப்பப்படுகின்றன. இருப்பினும், குறுஞ்செய்தி அனுப்பும் பலர் உள்ளனர்.
இங்கிலாந்தில் 2021இல் நாளாந்தம் 4000 குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இது 2012ல் உலகம் முழுவதும் 15,000 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் தினமும் 10,000 கோடி வட்ஸ்அப் செய்திகள் அனுப்பப்படுவதாக ஸ்டேடிஸ்டா தெரிவித்துள்ளது.