25 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இந்தியா

ஒரு .இளைஞனையே திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள்: பிரிந்திருக்கமாட்டார்களாம்!

இரட்டைச் சகோதரிகள் ஒருவரையொருவர் பிரிய மனமில்லாமல், ஒரே இளைஞரையே திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

மும்பை, மாண்ட்வா, மல்ஷிராஸ் தாலுகாவில் உள்ள அக்லுஜ் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது.

நவர்தேவ் அதுல் அவதாடே என்பவர் மல்ஷிராஸ் தாலுக்காவில் உள்ள மஹாலுங்கைச் சேர்ந்தவர். மும்பையில் பயணத் தொழில் செய்து வருகிறார்.

ஐடி இன்ஜினியரிங் படித்து, குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் இரட்டை சகோதரிகளான பிங்கி மிலிந்த் பட்கோன்கர் மற்றும் ரிங்கி மிலிந்த் பட்கோன்கர் இருவரும் ஒரே நேரத்தில் அதுலை திருமணம் செய்து கொண்டனர்.

இரட்டை சகோதரிகளான பிங்கி மற்றும் ரிங்கி சிறுவயதிலிருந்தே தோற்றத்தில் ஒரே மாதிரியானவர்கள். அவர்கள் ஒருவரையொருவர் பிரியாமல் வளர்ந்தவர்கள். இன்றுவரை இருவரும் ஒன்றாகவே சாப்பிடுகிறார்கள், தூங்குகிறார்கள். ஒன்றாக படித்தனர். ஒன்றாக வேலைக்கு சென்றனர். இறக்கும் வரை பிரியாமல் இருக்க வேண்டுமென்பது இருவரினதும் விருப்பம்.

இதனால், ஒரு இளைஞனையே இருவரும் திருமணம் செய்து, சேர்ந்து வாழ வேண்டுமென திட்டமிட்டிருந்தனர்.

இறுதியாக, அவதாடே மற்றும் பட்கோன்கர் குடும்பத்தினர் இந்த திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தனர். டிசம்பர் 2 ஆம் திகதி அக்லுஜ் கம்பூர் சாலையில் உள்ள கலண்டே ஹோட்டலில் வித்தியாசமான திருமணம் நடைபெற்றது.

மல்ஷிராஸ் தாலுகாவைச் சேர்ந்த அதுல் என்ற இளைஞனுக்கு சில காலத்தின் முன் பட்கோன்கர் குடும்பத்துடன் தொடர்பு ஏற்பட்டது. தந்தை இறந்துவிட்டதால் யுவதிகள் தாயுடன் வசித்து வந்தனர். தாய் மற்றும் இரண்டு மகள்கள் நோய்வாய்ப்பட்டால், வைத்தியசாலைக்கு செல்வதற்கு அதுலின் காரையே அழைப்பார்கள்.

இந்த நேரத்தில், தாயையும், பிள்ளைகளையும் அதுல் நன்றாக கவனித்துக் கொண்டார். இதனால் அவர்களிற்குள் நெருக்கம் அதிகரித்தது.

இறுதியாக, டிசம்பர் 2 ஆம் திகதி, பிங்கி மற்றும் ரிங்கிழய அதுல் திருமணம் செய்து கொண்டார். இந்த தனித்துவமான திருமணத்திற்கு இரு தரப்பிலிருந்தும் சுமார் 300 விருந்தினர்கள் கல்லண்டே ஹோட்டலில் கூடியிருந்தனர். இந்த திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, இது எல்லா இடங்களிலும் விவாதிக்கத் தொடங்கியது.

இந்த திருமணம் சட்டவிரொதமானது, இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 494 இன் படி நடவடிக்கையெடுக்க வேண்டுமென மணமகனின் உறவினர் ஒருவர்  அக்லுஜ் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ – தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை

Pagetamil

மருதங்கேணி பொலிஸாரால் சற்றுமுன் இரண்டு பெண்கள் கைது: மேலும் இருவருக்கு அழைப்பு

east tamil

ஆசிரியரின் ஆபாச பேச்சால் தற்கொலைக்கு முயன்ற 10ம் வகுப்பு மாணவி

east tamil

மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த மாணவர்கள் கேரளாவில் கொடூரம்

east tamil

“விமான நிலையம் வேண்டாம் என்று கூறவில்லை, ஆனால்” – பரந்தூரில் விஜய் பேசியது என்ன?

Pagetamil

Leave a Comment