நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் பெல்ஜியம் அணி முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. மறுபக்கம் குரோஷியா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இரு அணிகளும் அல் ரய்யான் பகுதியில் உள்ள அகமது பின் அலி மைதானத்தில் விளையாடின.
குரூப் ‘எஃப்’ பிரிவில் இந்த இரு அணிகளும் இடம் பெற்றன. இதில் குரோஷியா அணி தோல்வியை தவிர்த்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் நிலையில் களம் கண்டது. பெல்ஜியம் அணியோ வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடியது. கடந்த 2018 ரஷ்ய உலகக் கோப்பை தொடரில் குரோஷியா இரண்டாவது இடமும், பெல்ஜியம் மூன்றாவது இடமும் பிடித்திருந்தன.
இரண்டு அணிகளும் சரி சதவீதமாக பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. பந்த பாஸ் செய்வது, ஷாட் ஆடுவது என அனைத்தும் சரி சமமாகவே இருந்தன. ஆனால் எந்த அணியும் இறுதி வரை கோல் பதிவு செய்யவில்லை. இரண்டாவது பாதியில் பெல்ஜியம் அணி வீரர் லூகாகுவுக்கு சில வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், அது கோலாக மாறவில்லை. அதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. குரோஷியா, 1 வெற்றி மற்றும் 2 டிரா என 5 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் பல வாய்ப்புக்களை வீணடித்தது.
Romelu Lukaku vs Croatia pic.twitter.com/fmRUL1CvEp
— 🫵🏽🇧🇷🇫🇷 (@idoxvi) December 1, 2022
அருமையான கோல் வாய்ப்பை தவறவிட்ட பெல்ஜியம் முன்கள வீரர் ரோமேலு லுகாகு, பெல்ஜியம் டக்அவுட் மீது குத்தி கோபத்தை வெளிப்படுத்தினார்.
Romelu Lukaku is fuming after #BEL exit the competition. ⤵️ pic.twitter.com/0Wl1GXPM9s
— EuroFoot (@eurofootcom) December 1, 2022
மறுபக்கம் மொராக்கோ அணி, இதே பிரிவில் 7 புள்ளிகளை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 1986ஆம் ஆண்டின் பின்னர் மொராக்கோ, குரூப் 16 நிலைக்கு முன்னேறியுளள்து.
நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் மொராக்கோ, கனடாவை 2-1 என வீழ்த்தியது. கனடா தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்தது.
அதனால் மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடித்த பெல்ஜியம் மற்றும் கனடா அணி முதல் சுற்றில் இருந்து வெளியேறி உள்ளன.
குரூப் 16 ஆட்டங்களில் குரூப் இ இல் இரண்டாமிடம் பிடித்த ஸ்பெயினை, மொராக்கோ எதிர்கொள்ளும்.