ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதக் குழுவின் தலைவர் அபு ஹசன் அல்-ஹாஷிமி அல்-குராஷி போரில் உயிரிழந்து விட்டார் என அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது. அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள ஓடியோ செய்தியில் இந்த விபரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐ.எஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஒமர் அல்-முஹாஜர் வெளியிட்டுள்ள குரல் பதிவில், ஈராக்கை சேர்ந்தஹாஷிமி, “கடவுளின் எதிரிகளுடனான போரில்” கொல்லப்பட்டார் என்றார். அவர் இறந்த திகதி அல்லது சூழ்நிலையை விவரிக்கவில்லை.
அந்த குரல் பதிவில், ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவரா அபு அல்-ஹுசைன் அல்-ஹுசைனி அல்-குராஷி செயற்படுவார் என அறிவித்தார்.
இதேவேளை, ஐ.எஸ் அமைப்பின் தலைவர் கடந்த மாதம் சுதந்திர சிரிய இராணுவத்தால் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
2014 இல் ஈராக் மற்றும் சிரியாவில் பரந்த நிலப்பரப்பை கைப்பற்றிய ஐ.எஸ் அமைப்பு கலீபா ஆட்சியை பிரகடனப்படுத்தியது. எனினும், ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக அமெரிக்கா இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.
2017 இல் ஈராக்கிலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிரியாவிலும் அந்த அமைப்பு தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சுன்னி முஸ்லீம் தீவிரவாதக் குழுவின் ஸ்லீப்பர் செல்கள் இன்னும் இரு நாடுகளிலும் தாக்குதல்களை நடத்துகின்றன. உலகின் பிற இடங்களில் தாக்குதல்களைக் கோருகின்றன.
ISIS இன் முந்தைய தலைவரான அபு இப்ராஹிம் அல் குராஷி இந்த ஆண்டின் தொடக்கத்தில் வடக்கு சிரியாவில் உள்ள இட்லிப் மாகாணத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அதற்கு முன்னைய தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி ஒக்டோபர் 2019 இல் இட்லிப்பில் கொல்லப்பட்டார்.
இதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபு அல்-ஹசன் அல்-ஹஷேமி அல்-குரைஷி கடந்த மாதம் சுதந்திர சிரிய இராணுவத்தால் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
“இந்த நடவடிக்கையை சிரியாவில் உள்ள டாரா மாகாணத்தில் சுதந்திர சிரிய இராணுவம் நடத்தியது. ISIS இப்பகுதிக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது” என்று அமெரிக்க மத்திய கட்டளைத் தொடர்பாளர் கேணல் ஜோ புசினோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மத்திய கட்டளை மற்றும் வாஷிங்டனின் பங்காளிகள் ISIS இன் நீடித்த தோல்வியில் கவனம் செலுத்துவதாக புசினோ கூறினார்.
ஆனால் இந்த நடவடிக்கையில் அமெரிக்க படைகள் எதுவும் ஈடுபடவில்லை என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
இந்த ஆண்டில் கொல்லப்பட்ட இரண்டாவது ISIS தலைவர் இவராவார்.
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் முன்னாள் தலைவர் அபு இப்ராஹிம் அல் குராஷியை கொல்லும் நடவடிக்கை வெற்றி பெற்றதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் பிப்ரவரி மாதம் அறிவித்தார்.
2019 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் மீது இராணுவத் தாக்குதலுக்கு உத்தரவிட்டதை அடுத்து, அப்போதைய தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியும் இப்லிப்பில் கொல்லப்பட்டார்.
ஆனால், சிரியாவில் அமெரிக்க ஆதரவு பெற்ற குர்திஷ் போராளிகள் மீது துருக்கி இராணுவம் சமீபத்தில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிரான வெற்றிகள் ஆபத்தில் உள்ளன.
சிரிய ஜனநாயகப் படைகள் (SDF) அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளை சமாதானப்படுத்தி, வடக்கு சிரியாவில் திட்டமிட்டுள்ள தரைவழிப் படையெடுப்பை நிறுத்துமாறு துருக்கியை வற்புறுத்தி வருகின்றன. துருக்கி தனது நடவடிக்கைகள் பயங்கரவாதிகளுக்கு எதிரானது என்று கூறுகிறது, ஆனால் SDF பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவின் முக்கிய பங்காளியாக இருந்து வருகிறது.