போர்ச்சுகல் கப்டனும் முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல் நாஸ்ர் கால்பந்து கிளப்புடன் ஆண்டுக்கு 207 மில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக ஸ்பானிஷ் செய்தித்தாள் மார்கா தெரிவித்துள்ளது.
37 வயதான அவர் இந்த மாத தொடக்கத்தில் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பை விட்டு பிரிந்தார். அணிக்குள் நடக்கும் குழறுபடிகள் பற்றி சர்ச்சைக்குரிய நேர்காணலை தொடர்ந்து கிளப்பை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
ரொனால்டோ இப்போது அல் நாசருடன் இரண்டரை வருட ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது – அந்த அணிக்காக அவர் 40 வயது வரை விளையாடுவார்.
ரொனால்டோவும், அல் நாஸ்ர் கிளப்பும் இணக்கத்திற்கு வந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,கிளப் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.
அல் நாஸ்ர் சவுதி அரேபியாவின் மிகவும் வெற்றிகரமான கிளப்புகளில் ஒன்றாகும். நாட்டின் சிறந்த கிளப் வெற்றியாளராக 9 மறை தெரினாவது.
இறுதியாக, 2019 இல் சம்பியனாகியிருந்தது.
2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு வருடங்களிலும், சவுதி சூப்பர் கிளப் கோப்பையை வென்றது.பிரான்ஸ் முன்னாள் வீரர் ரூடி கார்சியா அந்த அணிக்கு பயிற்சியாளராக உள்ளார்.