மோதிப் பார்க்க தயார்; பலமானவர்களையே வீட்டுக்கு அனுப்பினேன்: மைத்திரி!

Date:

அரசியல் ரீதியாக யாரேனும் மோத வந்தால் மோதிப்பார்க்க தயார் எனவும், தற்போது மோத வருபவர்களை விட பெரியவர்களுடன் மோதி, அவர்களை வீட்டுக்கு அனுப்பியதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்று (30) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் அனைவரும் ஒன்றிணைந்து நல்லதொரு வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, அரசியல் ரீதியாக பிரிந்துள்ள ஏனைய அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பாராளுமன்றத்தின் பல்வேறு தரப்பினரின் ஆதரவை கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தை சீர்குலைக்கச் சென்றவர்கள் பலவற்றைச் செய்ததாகவும், ஆனால் அவர்களை விட பலமானவர்களைச் எதிர்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (30) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்று சபைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்