இங்கிருந்து கல்வி மற்றும் பயிற்சி பெற்று நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் தொடர்பில் சபை கலந்துரையாடி பதில் காண வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கம் ஒவ்வொரு மருத்துவ மாணவருக்கும் 6 மில்லியன் ரூபாயை செலவிடுவதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
“இலங்கையானது வெளிநாடுகளுக்கு நன்கு தகுதியான மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்களை உற்பத்தி செய்து, பயிற்சி அளித்து, வழங்கும் இக்கட்டான சூழ்நிலையில் நாம் உள்ளோம்” என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க கூறினார்.
“எங்கள் சுகாதார அமைச்சரின் பெரும் அர்ப்பணிப்புக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். ஊவாவெல்லஸ்ஸ, குருநாகல் மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களில் மூன்று மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கான முன்மொழிவு இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு போதனா மருத்துவமனைகளும் அடங்கும். மூன்று பல்கலைக்கழகங்கள் மருத்துவ அறிவியலில் முனைவர் பட்டத்தை வழங்க உள்ளன. இது ஒரு சிறந்த படியாகும். எம்ஆர்ஐயை உருவாக்க அதிக நிதியுதவி பெறுவோம். ஒரு மருத்துவ மாணவருக்கு சுமார் ரூ.6 மில்லியன் செலவிடுகிறோம். அவர்கள் இந்த நாட்டிற்கு சேவை வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்புடனேயே அவர்களுக்காக பணத்தை செலவு செய்கின்றோம். எனினும் அவர்கள் வெளிநாடு செல்கின்றனர். இது ஒரு முக்கிய பிரச்சனை. இது குறித்து சபை விவாதிக்க வேண்டும். நாம் கற்றுத் தந்த, பயிற்சி அளித்து, வெளிநாடுகளுக்கு அனுப்பிய மருத்துவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த நாடுகள் நமக்குத் திருப்பித் தரும் உதவி சிறியது என்று தோன்றுகிறது. அனுபவமுள்ளவர்களை அனுப்புகிறோம்“ என்றார்.