மூன்று மாடுகளை திருடிய சம்பவம் தொடர்பில் பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கஹட்டகஸ்திகிலிய கிரிப்பெவே பிரதேசத்தை சேர்ந்த இந்த கான்ஸ்டபிள் மேலும் பலருடன் இணைந்து இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடைசியாக பதவியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அவர், 2006ஆம் ஆண்டு சேவையிலிருந்து விலகுமாறு உத்தரவிடப்பட்டார்.
மூன்று மாடுகளின் பெறுமதி சுமார் 500,000 ரூபா எனவும் திருடப்பட்ட மாடுகளை கொன்று இறைச்சியாக விற்பனை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1