25.6 C
Jaffna
December 16, 2024
Pagetamil
விளையாட்டு

பிரேசிலின் ஒரேயோரு கோல்… காரணமாக இருந்த பலர்… ஹீரோ வினிஷியஸ்!

கட்டாரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பைக் கால்பந்து ‘ஜி’ பிரிவு ஆட்டத்தில் பிரேசில் – சுவிட்சர்லாந்து அணிகள் மோதிய போட்டி விறுவிறுப்பின்றி சொதப்பலாகவும் மந்தமாகவும் பிரேசிலின் 1-0 வெற்றியுடன் முடிந்தது. இந்த ஒரு கோலையும் ரோட்ரிகோ செட் செய்து கொடுக்க காஸிமிரோ கோலாக மாற்றியிருக்கலாம். ஆனால், உண்மையில் இந்த கோலின் பின்னணி உந்து சக்தியாக இருந்தவர் வினிஷியஸ் ஜூனியர் எனும் அற்புதன் தான். இவர் பிரேசிலின் அடுத்த ஸ்டார்.

பிரேசில் 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கலாம். ஆனால் திங்கள்கிழமை போல் ஆடினால் இறுதி 16 சுற்றில் நிச்சயம் ஏதாவது அணியிடம் பிரேசில் தோற்கும் அபாயம் உள்ளது என்றே எச்சரிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், நெய்மர் இல்லாமல் பிரேசில் அணி அதன் வேகத்தில் இல்லை. திங்கள்கிழமை ஆட்டத்தில் முதல் பாதியில் சுவிட்சர்லாந்தை பிரேசில் எந்த வித அழுத்தத்திற்கும் ஆட்படுத்தவேயில்லை. ஆட்படுத்த முடியவில்லை என்பது கண்கூடு.

வினிஷியஸ் கோலும் ஓஃப் சைட் தீர்ப்பும்

இரண்டாவது பாதியில் கொஞ்சம் தாக்குதல் ஆட்டத்தை ஆடி சுவிட்சர்லாந்தை மிரட்டியது. ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் நடுக்கள வீரர்கள் மூன்று பேரும் உருண்டு வந்த பந்தை கோட்டை விட்டனர். அப்போது ரோட்ரீகோ புகுந்து பந்தை எடுத்து காஸ்மிரோவுக்கு அனுப்பினார். அவர் இடது புறம் நின்று கொண்டிருந்த அபாய வினிஷியஸ் ஜூனியருக்குப் பந்தை செலுத்தினார். வினிஷியஸிடம் பந்து சென்ற உடன் ஆபத்தை உணர்ந்த சுவிஸ் வீரர் விட்மர் சறுக்கியபடியே தடுக்க வந்தார்.

ஆனால், இந்த இளம் புலி வினிஷியசின் வேட்டையைத் தடுக்க முடியவில்லை. ஒரு லேசான டச்சில் கோலுக்கு அருகில் பொக்சுக்குள் நுழைந்தார் மிகப் பிரமாதமாக சுவிஸ் கோல் கீப்பர் சோமரைக் கடந்து பந்தை வலையின் வலது மூலைக்குள் அடித்தார். பிரேசில் 1-0 என்று சுவிஸ் ரசிகர்கள் ஆரவாரமும் சப்தமும் ஒடுங்கிப் போயின. ஆனால், வீடியோ ரெஃபரல் கேட்கப்பட்டது.

பந்து காஸ்மிரோவிடம் அடிக்கப்படும்போது பிரேசில் வீரர் ரிகார்லிசன் ஏற்கெனவே ஓஃப் சைட் ஆகியிருந்தார். பிரமாதமான கோல் ஆஃப் சைடினால் இல்லாமல் போனது. இதில் கோபமடைந்த வினிஷீயஸ் மிகவும் ஆக்ரோஷமாக ஒரு பந்தை கோல் நோக்கி எடுத்துச் செல்ல பாக்சுக்கு வெளியே அவரை சுவிஸ் வீரர் அகாஞ்சி ஃபவுல் செய்தார், விளைந்த ஃப்ரீ கிக் விரயமானது.

73வது நிமிடத்தில் பிரேசில் ரிகார்லிசனையும் ரபீன்யாவையும் பெஞ்சுக்கு அழைத்து பதிலுக்கு கேப்ரியல் ஜெசூஸ் மற்றும் ஆண்டனி ஆகியோரை களத்துக்கு அனுப்பியது. 83வது நிமிடத்தில்தான் பிரேசில் எதிர்நோக்கியத் தருணம் அமைந்தது. மார்க்கினியோஸ் நடுக்களத்திலிருந்து பந்தை இடது விங்கில் இருந்த வினீஷியஸுக்கு அனுப்பினார். அங்கு இரண்டு தடுப்பாட்ட வீரர்களைக் கடைந்து பந்தை ரோட்ரிகிற்குத் தள்ள, ரோட்ரிக் தனக்கு முன்னால் சற்றே இடது புறம் கோலுக்கு அருகில் இருந்த காஸிமேரோவிடம் பந்தைத் தள்ள, கோல் வலைக்குள் ரொப் ரைட்டில் உள்ளே தள்ள பிரேசில் 1-0 என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

இந்தக் கோல் அடித்ததென்னவோ, பினிஷிங் செய்ததென்னவோ காஸிமிரோதான். ஆனால், அவருக்கு முதலில் அசிஸ்ட் செய்தது ரோட்ரிகோ. அவருக்கு முன்னால் வினிஷியஸ் மூன்று பேரைக் கடந்து ரோட்ரிக்கிற்கு அடித்தது, அதற்கும் முன்னால் மார்க்கினோஸ் பந்தை நடுக்களத்திலிருந்து பந்தை இடது விங் வினிஷியஸுக்கு அனுப்பியது. கோலுக்கு முன்னால் இத்தனை சங்கிலித் தொடர் உள்ளது. கால்பந்து ஒரு டீம் கேம் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் என்னவேண்டும்?

சுவிட்சர்லாந்து அணி எப்போதும் பிரேசிலுக்கு சவாலாகவே இருந்து வந்துள்ளது. இதுவரை 9 முறை இந்த அணியுடன் பிரேசில் ஆடியதில் 4 முறை சமன் ஆகியுள்ளது. பிரேசில் 2 இல் தோல்வியடைந்து 3 இல் வெற்றி பெற்றுள்ளது. எனவே, சுவிட்ஸர்லாந்து என்றால் பிரேசிலுக்கு ‘கேக் வாக்’ என்று நினைக்கும் பிரேசிலின் உலக ரசிகர்களுக்கு இந்தப் பின்புலம் தெரியாதிருந்தால் திங்கள்கிழமை ஆட்டம் பிரேசிலுக்கு ஒரு பெரிய சவால் என்பதும், இந்த ஒரு கோலே பெரிய விஷயம் என்பதும் தெரிய வாய்ப்பில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அவுஸ்திரேலியா 445 ஓட்டங்கள்: திண்டாடும் இந்தியா!

Pagetamil

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்”: டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

Pagetamil

‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

Pagetamil

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆண்: மருத்துவ அறிக்கையில் உறுதி

Pagetamil

Leave a Comment