ஜப்பானை வீழ்த்தியது கோஸ்டாரிகா

Date:

கட்டார் உலகக் கோப்பை குரூப் E பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் கோஸ்டாரிகா அணி ஜப்பானை 1-0 என வீழ்த்தியது.

குரூப் E பிரிவில் இப்பொழுது ஸ்பெயின், கோஸ்டாரிகா, யப்பான் அணிகள் தலா 3 புள்ளிகளை பெற்றுள்ளன.

போட்டியின் இரண்டாவது பாதியில் கோஸ்டாரிகாவின் கீஷர் ஃபுல்லர் கோலடித்தார்.

முதல் ஆட்டத்தில், ஸ்பெயினிடம் 7-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த கோஸ்டாரிகா,நொக் அவுட் சுற்று பந்தயத்தில் தன்னை தக்க வைத்துள்ளது.

இதேவேளை, முதலாவது ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்திய யப்பானிற்கு இது அதிர்ச்சித் தோல்வி.

குரூப் E பிரிவில்  ஸ்பெயினும், ஜேர்மனியும் தலா ஒரு போட்டியில் முடியுள்ளன. ஜப்பான், கோஸ்டாரிகா 2 போட்டிகளில் ஆடியுள்ளன. ஜப்பான் அடுத்த ஆட்டத்தில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது. கோஸ்டாரிகா ஜெர்மனியை எதிர்கொள்கிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்