ரவுண்ட் ஒப் 16ல் நுழைந்த‌து பிரான்ஸ்!

Date:

கத்தார் 2022 உலக கோப்பை கால்பந்து தொடரில் குரூப் டி பிரிவில் நேற்று இரவு ஸ்டேடியம் 974 இல் நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் 61 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே முதல் கோல் அடித்து அசத்தினார்.

இதற்கு பதிலடியாக 68வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் ஆன்ட்ரெஸ் கிறிஸ்டென்சன் கோல் அடிக்க ஆட்டம் சூடு பிடித்தது.

1 – 1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டிய நிலையில் 86 நிமிடத்தில் மீண்டும் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே கோல் அடித்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.

அவரின் அசத்தலான ஆட்டத்தால் ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் டி பிரிவில் 6 புள்ளிகளுடன் பட்டியலில் அந்த அணி முதலிடம் பிடித்ததுடன், அடுத்த சுற்றான ரவுண்ட் ஒப் 16ல் நுழைந்த‌ முதல் அணியாக பிரான்ஸ் மாறியது.

spot_imgspot_img

More like this
Related

யானைகள் வழிமறித்ததால் வைத்தியசாலை கொண்டுசெல்ல தாமதம்: பாம்பு தீண்டிய யுவதி மரணம்!

பாம்பு தீண்டிய யுவதியொருவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது, யானைகள் இடைமறித்ததால்...

இலங்கையில் நிலநடுக்க அபாயம்? மத்திய மலைநாடு தொடர்பில் பேராசிரியர் விடுத்துள்ள எச்சரிக்கை!

இத்தகைய புவியியல் மாற்றங்கள் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுவதாகவும்...

சிறுமிக்கு இழைத்த கொடுமைக்காக உதவி ஆய்வாளருக்கு 50 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்