பதுளை- வெவெஸ்த்தை தோட்டம் சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவர், அவரது மனைவியின் மகனால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
29 வயதுடைய வாய்பேசமுடியாத மகனே, 60 வயதான நபரை மரக்கட்டையால் அடித்துக் கொன்றார்.
இச்சம்பவம் நேற்று (26) மாலை சுமார் 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இளைஞன் கொட்டனால் தாக்க வந்த போது அந்த நபர் வீட்டினுள் சென்று கதவை மூடிக்கொண்ட நிலையில் சந்தேகநபர் கதவை உடைத்து உள்ளே நுழைந்து தாக்கியுள்ளார்.
சந்தேகநபரும் நேற்று இரவு பதுளை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான இளைஞரின் தந்தை பல வருடங்களுக்கு முன்னரே குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். உயிரிழந்த நபர் தாயின் இரண்டாவது கணவர் என்றும் பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1