27.4 C
Jaffna
January 31, 2025
Pagetamil
விளையாட்டு

நெய்மர் காயம்: உலகக்கோப்பையிலிருந்து வெளியேறுகிறாரா?

பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மருக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையை மதிப்பிட 24 மணித்தியாலங்கள் முதல் 48 மணித்தியாலங்கள் தேவையென அணியின் மேலாளர் தெரிவித்துள்ளார்.

2022 உலகக் கோப்பை தொடரில் பிரேசில் நேற்று வியாழக்கிழமை தனது முதலாவது போட்டியில் ஆடியது. செர்பியாவுடனான போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றியீட்டியது.

இந்த போட்டியில், கடைசி 10 நிமிடங்களின் முன்னர் நெய்மர் மைதானத்திலிருந்து வெளியேறினார். சிகிச்சை தேவைப்படும் கணுக்கால் வீக்கத்துடன் நெய்மர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

நெய்மரின் கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.

போட்டியின் பின்னர் பேசிய பிரேசில் அணி மருத்துவர், நெய்மருக்கு கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கு 24 முதல் 48 மணிநேரம் வரை அவகாசம் தேவை என்றும் உறுதி செய்தார்.

நெய்மர் இந்த உலகக்கோப்பையில் தொடர்ந்து விளையாடுவார் என அணியின் மேலாளர் டைட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“நீங்கள் உறுதியாக இருக்க முடியும்: நெய்மர் உலகக் கோப்பையில் விளையாடுவார். இதை நீங்கள் உறுதியாக நம்பலாம், நெய்மர் உலகக் கோப்பையில் விளையாடுவார்“ என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

Leave a Comment