27.4 C
Jaffna
December 15, 2024
Pagetamil
விளையாட்டு

FIFA WC 2022: போர்த்துக்கல் வெற்றி; ரொனால்டோ புதிய சாதனை!

22-வது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நள்ளிரவு மைதானம் 974ல் நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்த்துக்கல், கானா அணிகள் மோதின.

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் வறட்சியாக செல்ல 65வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து இந்த உலகக் கோப்பையில் அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். இன்று கோல் அடித்ததன்மூலம் 5 உலகக் கோப்பை தொடரில் கோல் பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரொனால்டோ.

தொடர்ந்து ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் கானா அணியின் கப்டன் ஆண்ட்ரூ ஆயு ஒரு கோல் அடித்து போர்த்துக்கல்லுக்கு பதிலடி கொடுத்தார். என்றாலும் சுதாரித்துக்கொண்ட போர்த்துக்கல் அணியில், ஜோ பெலிக்ஸ் 78வது நிமிடத்திலும், 80-வது நிமிடத்தில் ரபேல் லியோவும் தலா ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினர்.

இறுதிக்கட்டத்தில் கானா அணியின் ஓஸ்மான் புகாரி 89வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தாலும், தோல்வியை தழுவியது. ஆட்டநேர முடிவில் போர்த்துக்கல் 3-2 என்ற கோல் கணக்கில் கானா அணியை வீழ்த்தி குரூப் எச் பிரிவில் முதலிடம் பிடித்தது.

இந்தப்போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்ததன் மூலம் லயோனல் மெஸ்ஸி இதுவரை வைத்திருந்த சாதனையை தகர்த்து புதிய சாதனையை படைத்தார் ரொனால்டோ.

மெஸ்ஸி நான்கு வெவ்வேறு உலகக் கோப்பை போட்டிகளில் (2006, 2014, 2018, 2022) கோல் அடித்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். இதற்கு முன்னதாக பீலே, உவே சீலர், மிரோஸ்லாவ் க்ளோஸ் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரும் இதே சாதனையை செய்திருந்தனர். என்றாலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்றைய போட்டியில் கோல் அடித்ததன்மூலம் மெஸ்ஸியின் சாதனையை முந்தி 2006, 2010, 2014, 2018, 2022 ஆகிய ஐந்து உலகக்கோப்பைகளில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்

அதேபோல், ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் கோல் எண்ணிக்கையில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரொனால்டோ செய்துள்ளார். மெஸ்ஸி இதுவரை ஃபிஃபா உலகக் கோப்பை தொடர்களில் இதுவரை 20 போட்டிகளில் விளையாடி 7 கோல்களை அடித்துள்ளார். அதேநேரம், உலகக் கோப்பை தொடர்களில் இதுவரை 7 கோல்கள் அடித்திருந்த ரொனால்டா, இன்று எட்டாவது கோலைப் பதிவு செய்து அசத்தினார்.

போர்த்துக்கல் அணியை பொறுத்தவரை புகழ்பெற்ற வீரர் யூசிபியோ உலகக்கோப்பை தொடரில் 9 கோல்கள் அடித்ததே அதிகபட்ச சாதனையாக இருக்கிறது. இதை முறியடிக்க, ரொனால்டோவுக்கு இன்னும் இரண்டு கோல் தேவைப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்”: டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

Pagetamil

‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

Pagetamil

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆண்: மருத்துவ அறிக்கையில் உறுதி

Pagetamil

ஐபிஎல் 2025: தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்!

Pagetamil

Leave a Comment