பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மருக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையை மதிப்பிட 24 மணித்தியாலங்கள் முதல் 48 மணித்தியாலங்கள் தேவையென அணியின் மேலாளர் தெரிவித்துள்ளார்.
2022 உலகக் கோப்பை தொடரில் பிரேசில் நேற்று வியாழக்கிழமை தனது முதலாவது போட்டியில் ஆடியது. செர்பியாவுடனான போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றியீட்டியது.
இந்த போட்டியில், கடைசி 10 நிமிடங்களின் முன்னர் நெய்மர் மைதானத்திலிருந்து வெளியேறினார். சிகிச்சை தேவைப்படும் கணுக்கால் வீக்கத்துடன் நெய்மர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
நெய்மரின் கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.
போட்டியின் பின்னர் பேசிய பிரேசில் அணி மருத்துவர், நெய்மருக்கு கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கு 24 முதல் 48 மணிநேரம் வரை அவகாசம் தேவை என்றும் உறுதி செய்தார்.
நெய்மர் இந்த உலகக்கோப்பையில் தொடர்ந்து விளையாடுவார் என அணியின் மேலாளர் டைட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“நீங்கள் உறுதியாக இருக்க முடியும்: நெய்மர் உலகக் கோப்பையில் விளையாடுவார். இதை நீங்கள் உறுதியாக நம்பலாம், நெய்மர் உலகக் கோப்பையில் விளையாடுவார்“ என்றார்.