புதுக்குடியிருப்பு உடையார்கட்டு தெற்கு அம்மன் கோவிலுக்கு பின்புறம் உள்ள காணியொன்றை நேற்று (24) துப்புரவு செய்து கொண்டிருந்த போது, காணியின் மலசலகூடத்திற்கு பின்னால் மனித எலும்புகளுடன் உரப்பை மீட்கப்பட்டது.
உரப்பை ஒன்றிற்குள் எலும்புத் துண்டுகள் காணப்பட்டன.
நிலத்தின் உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். பையில் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
பலா மரத்தை வெட்ட மண்ணை தோண்டிய போது, கயிறு ஒன்று காணப்பட்டதாகவும் மேலும் தோண்டியபோது பழைய உரமூட்டை மூன்றடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்டதாகவும் காணியின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் உயிரிழந்த ஏதேனும் ஒரு தரப்பினருடைய எலும்புக்கூடாக இருக்கலாமென கருதப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1