உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ்வே அருகே, கடந்த 18ஆம் திகதி ஒரு பெரிய சிவப்பு நிற சூட்கேஸ் இருந்துள்ளது. கேட்பாராற்று கிடந்த சூட்கேஸை பார்த்த அங்கிருந்த தொழிலாளர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்ற பார்த்தபோது, பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. முகம் மற்றும் தலையில் ரத்தமும், உடல் முழுவதும் காயங்கள் இருந்ததுள்ளன.
போலீசார் விசாரணையில் சூட்கேஸுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் டெல்லியைச் சேர்ந்த 21 வயது ஆயுஷி யாதவ் என்பது தெரியவந்தது.
இதையடுத்து கொலையான பெண்ணின் பெற்றோரை, மதுரா போலீஸார் கைது செய்தனர்.
பொலிசாரின் விசாரணையில் கொலைப் பின்னணி வெளியானது.
ஆயுஷி தனது பெற்றோருக்கு தெரிவிக்காமல் சில நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக ஒருவரை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. நவம்பர் 18, வெள்ளிக்கிழமை, அவர் வீடு திரும்பியபோது, ஆயுஷிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து, தந்தை, ஆயுஷியை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த இடத்திலேயே ஆயுஷி இறந்துவிட்டார்.
பின்னர் பெற்றோர்கள் தங்கள் மகளின் உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி சூட்கேஸில் அடைத்தனர். அதிகாலை 3 மணியளவில், தாயும் தந்தையும் தங்கள் மகளின் சடலம் அடங்கிய சூட்கேஸைக் கொண்டு வந்து யமுனை விரைவுச் சாலை சர்வீஸ் சாலையில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மையம் அருகே உள்ள புதருக்குள் வீசினர்.
தாய் மற்றும் தந்தையிடம் விசாரணை நடத்திய போது அவர்களின் வாக்குமூலத்தில் பல முரண்பாடுகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூடுதல் விசாரணைக்கு பிறகு இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
ஆயுஷியின் தாய் மற்றும் சகோதரர் முன்னிலையில் தந்தை சுட்டுக் கொன்றதாக அவர்கள் வெளிப்படுத்தினர்.