காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் நேற்று மாலை சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தற்போது மருத்துவமனை தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில், ‘நடிகர் கமல்ஹாசன் நேற்று (23.11.2022) லேசான காய்ச்சல், சளி, இருமலுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலம் தேறி வரும் அவர், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.