யாழ். மாவட்ட மாணவர்கள் பாகிஸ்தானில் உயர் கல்வியை தொடர்வதற்கு உரிய ஒழுங்குகள் செய்து கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி ஜெனரல் உமர் பருக் பர்கி தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை யாழ். மாநகர சபையில் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் வருடம் தோறும் 1200 மாணவர்களை உயர்கல்விக்காக பாகிஸ்தான் அரசு உள்ளீர்க்கிறது.
அதேபோல் யாழ். மாவட்டத்தில் உள்ள மாணவர்களும் தமது உயர் கல்வியை பாகிஸ்தானில் கற்பதற்கான ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் யாழ். மாநகர ஆணையாளர் ஜெயசீலனும் கலந்து கொண்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1