தென்மேற்கு வங்காள விரிகுடாவில் யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கே 540 கி.மீ தொலைவில் அட்சரேகை 11.4N மற்றும் தீர்க்கரேகை 84.6E ஆகிய இடங்களில் காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டு படிப்படியாக வலுவிழந்து வடமேற்கு நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேற்கு மற்றும் தென் கரையோரப் பகுதிகளிலும் வட மாகாணத்திலும் சிறிதளவு மழை பெய்யும். நாட்டின் பிற பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1