17 வயது மாணவியின் முகநூல் கணக்கை தொலைபேசி திருத்தும் ஒருவர் ஹக் செய்து, மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுபவராக சித்தரித்த சம்பவம் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை மேற்கொள்ளாத பண்டாரகம பொலிஸாருக்கு எதிராக பாணந்துறை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த வெடகே விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் உபாலி தலகல தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், வழக்கை உரிய முறையில் விசாரிப்பதற்காக சிறுமியின் முறைப்பாட்டை பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மாணவியின் தொலைபேசி பழுதடைந்ததையடுத்து, தொலைபேசி திருத்தும் நிலையம் ஒன்றில் பழுதபார்ப்பதற்காக கொடுத்துள்ளார். தொலைபேசி பழுதுபார்க்கப்பட்டதையடுத்து, சில நாட்களில் மாணவியின் நண்பர்கள், உறவினர்கள் அவரை தொடர்பு கொண்டு, முகநூலில் ஏன் அப்படி செயற்படுகிறாய் என கண்டித்த பின்னரே, முகநூல் ஹக் செய்யப்பட்டுள்ளதை மாணவி அறிந்தார்.
அந்த முகநூலில் மாணவியை விபச்சாரியாக சித்தரித்து, ஆண்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், ஆபாசப்படங்கள் பதிவேற்றப்பட்டிருந்தன.