இந்தியாவிலிருந்து உலர் பீடி புகையிலை இலைகளை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் 8 இந்திய பிரஜைகளும் 6 இலங்கை பிரஜைகளும் இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டள்ளனர்.
தூத்துக்குடி கடற்பரப்பில் இவர்கள் கைதாகினர்.
இந்திய கடலோர காவல்படையின் வஜ்ரா கப்பல் ரோந்து பணியின் போது 08 மீனவர்களுடன் இரண்டு இந்திய மீன்பிடி படகுகளையும், 06 மீனவர்களுடன் இரண்டு இலங்கை மீன்பிடி படகுகளையும் கைப்பற்றியது.
கைப்பற்றப்பட்ட 4 மீன்பிடி படகுகள், 14 மீனவர்களும் இன்று மாலை 6.00 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1