24.9 C
Jaffna
January 25, 2025
Pagetamil
மலையகம்

போதைப்பொருள் விற்பனை செய்த ஹொட்டல் முற்றுகை!

போதைப் பொருள் வர்த்தகம் இடம்பெற்ற ஹொட்டல் ஒன்று கம்பளை பொலிஸாரால் இன்று(15) காலை சுற்றிவளைக்கப்பட்டதுடன் 8 சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

31 வயதான ஹொட்டல் உரிமையாளரும் போதைப் ​பொருள்​வாங்க வந்திருந்த 21 தொடக்கம் 42 வயதுக்கு இடைப்பட்ட 7 பேரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

எவருக்கும் இலகுவில் சந்தேகம் ஏற்படாத வகையில் ஹொட்டல் ஒன்று போல குறித்த இடம் நடத்திச் செல்லப்பட்டதாகவும் இந்த இடத்துக்கு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டவர்கள் அதிகமாக வந்து செல்கின்றமை தொடர்பில் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்புக்கு அமைய கம்பளை ஊழல், ஒழிப்பு பிரிவின் அதிககாரிகளால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஹோட்டலின் மேல் மாடியில் உள்ள 3 அறைகளில் இந்த போதைப் பொருள் வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டு செல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் நகரை அண்மித்த பகுதிகளைக் கண்காணிப்பிற்காக பல இரகசிய ஜன்னல்களும் அமைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த ஹோட்டல் சுற்றிவளைக்கப்பட்டதுடன் இதன்போது பல்வேறு வகையான ​போதைப் பொருள்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 1 இலட்சத்து 6ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கம்பளை பொலிஸாரின் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைக்காக நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் ஜெரி மோப்ப நாயும் கொண்டு வரப்பட்டிருந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

எல்ல ரயில் டிக்கெட் மாபியாவை சேர்ந்த ஒருவர் கைது!

Pagetamil

ஹட்டனில் கரப்பான்பூச்சி சோறு

Pagetamil

மஸ்கெலியாவில் இறந்த நிலையில் புலியின் உடல் மீட்பு

east tamil

கண்டி-மஹியங்கனை வீதி: போக்குவரத்து தடை

east tamil

நானுஓயாவில் குடும்ப தகராறு – ஒருவர் பலி

east tamil

Leave a Comment