வியட்நாமில் தங்கியுள்ள 303 இலங்கையர்களிற்கும் மனிதாபிமான உதவி: ஐ.ஓ.எம்!

Date:

வியட்நாம் கடற்பகுதியில் மீட்கப்பட்ட 303 இலங்கை குடியேற்றவாசிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவுள்ளதாக புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐஓஎம்) அறிக்கையொன்றில் அறிவித்துள்ளது.

ஹனோயில் உள்ள இலங்கை தூதரகம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இந்த 303 இலங்கையர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் இலங்கை மற்றும் வியட்நாம் அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை மற்றும் வியட்நாம் செயல்பாட்டு அலுவலகங்கள் தேவையான உதவிகளை வழங்குகின்றன.

உள்ளூர் மற்றும் சர்வதேச நியமங்கள் மற்றும் சட்டங்களுக்கு இணங்க இந்த உதவி வழங்கப்படுவதாக புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், இந்த 303 இலங்கைக் குடியேற்றவாசிகளுக்கு ஆதரவளிக்க முன்வந்ததை வியட்நாம் பாராட்டுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த குடியேற்றவாசிகள் இலங்கைக்கு திரும்ப விருப்பமில்லை என தெரிவித்துள்ளதோடு, இந்த பிரச்சனையில் தலையிடுமாறு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வியட்நாம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ வழக்கறிஞராக நியமனம்

சர்ச்சைக்குரிய குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில்...

பாடசாலைக்கால காதலர்களின் உடல் ஒன்றாக அடக்கம்

ஹெனேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம்ஜோடி உயிரிழந்துள்ளது. கடந்த 9ஆம் திகதி இந்த...

மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்து ஓட்டுநருக்கு விளக்கமறியல்

கெஸ்பேவ-கொழும்பு வீதியில் உள்ள மிரிஸ்வத்த பகுதியில் 'மெட்ரோ' (Metro) பேருந்துடன் வேண்டுமென்றே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்