அதிகாரிகளின் முரண்பாடுகளால் கண்டாவளைக் கர்ப்பவதிகள் குழந்தைகள் பாதிப்பு: தீர்வு காணுமாறு பொது மக்கள் கோரிக்கை

Date:

தாய்சேய் சேவைகளைப் பெறுவதற்குச் செல்லும் கண்டாவளை பிரதேச கர்ப்பவதிகள்
மற்றும் பொதுமக்கள் தாம் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கவலை
தெரிவித்துள்ளார்கள். சேவை நாடிச்செல்லும் கர்ப்பவதிகள் மற்றும் பொதுமக்கள் காக்க வைக்கப்படுவது பார்வையிடப்படாமல் திருப்பி அனுப்பப்படுவது ஆகிய இன்னல்களுக்கு தற்போது அடிக்கடி ஆளாக்கப்படுவதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கண்டாவளை உதவி சுகாதார வைத்திய அதிகாரிக்கும் (AMOH) பிராந்திய சுகாதார
சேவைகள் பணிப்பாளருக்கும் (RDHS) இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் பல்வேறு
தளங்களில் பகிரங்கமாக வெளிப்பட்டிருந்தன. இதன் காரணமாக இரு தரப்பும்
களச்சுகாதாரப் பணியாளர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்த எத்தனிப்பதால்
இறுதியில் சேவை நாடிகளான கர்ப்பவதிகளும், குழந்தைகளும், பொதுமக்களுமே
பாதிக்கப்படுவதாக கள மருத்துவ மாதுக்களும் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கள மருத்துவ மாதுக்களது தொழிற்சங்கமானது உரிய
தரப்பினருக்கு முறையிட்டதை அடுத்து அண்மையில் வடமாகாண சுகாதாரத்
திணைக்களத்திலிருந்து வந்திருந்த விசாரணைக்குழுவினர் ஆரம்ப புலன்
விசாரணையினை மேற்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து தம்மீது வஞ்சினம் தீர்க்கும் வகையில் குறித்த உதவிச் சுகாதார
வைத்திய அதிகாரி நடந்து கொள்வதாகவும், கர்ப்பவதிகளை பார்வையிடுவதற்கு
மருத்துவ மாதுக்களுக்குத் தகுதி இல்லை என்று கூறித் தடுப்பதாகவும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரது உத்தரவின் பேரிலேயே மருத்துவமாதுக்கள் கர்ப்பவதிகளை பரிசோதித்ததாக எழுதித்தருமாறு அவர் துன்புறுத்துவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத களச் சுகாதார மருத்துவ மாதுக்களது தொழிற்சங்கப் பிரதிநிதி தெரிவித்தார்.

மேலும் மாவட்ட தாய்சேய் நல அதிகாரி கேட்டுக்கொண்டதற்கு அமைவாக தரவு
அறிக்கைகளை அனுப்பவதற்காக சனிக்கிழமை காலை (12) சுகாதார வைத்திய அதிகாரி
அலுவலகத்திற்கு சென்ற தமது தொழிற்சங்க உறுப்பினர்களான மூன்று மருத்துவ
மாதுக்களை ‘இன்று கடமை இல்லாதபோது ஏன் இங்கு வந்தீர்கள்?’ என அவர்களை
திருப்பி அனுப்பி விட்டதாகவும் மருத்துவ மாதுக்களது தொழிற் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்ட தாய்சேய் நல சேவைகள் பாதிக்கப்படுவதாவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனவே உயரதிகாரிகள் இது தொடர்பில் விரைந்து கவனம் செலுத்தி உரிய தீர்வினை
பெற்றுத் தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கண்டாவளை உதவிச் சுகாதார வைத்திய அதிகாரியைத் தொடர்பு கொண்டு
கேட்டபோது ‘தமக்கும் தமது பணியாளர்களுக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரே சிலரை தமக்கு எதிராகத் தூண்டி விடுவதாகவும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

கலாநிதி முபிஸால் அபூபக்கர் இந்தியா பயணம்: சர்வதேச காந்திய அமைதி மாநாட்டில் வளவாளராகப் பங்கேற்பு

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச காந்திய அமைதி மாநாட்டில் வளவாளராகக் (Resource Person)...

இந்தியா (NCEL) ) மற்றும் இலங்கை ( (COOPFED) ) இடையே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாடு ஆகியவற்றில்...

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: விசாரணை நவம்பர் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்