கெர்சன் நகரத்திலிருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கியதைத் தொடர்ந்து, அங்கு உக்ரைனிய ஜனாதிபதி Volodymyr Zelenskyy விஜயம் செய்தார்.
ரஷ்யா வெள்ளிக்கிழமை தனது படைகளைகெர்சனிலிருந்து திரும்பப் பெற்றது. இதை தொடர்ந்து, உக்iரனிய துருப்புக்கள் நகருக்குள் நுழைந்தன.
கெர்சன் நகருக்குள் நுழைந்த உக்ரைனியப் படைகள் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நூற்றுக்கணக்கான புதிய “போர்க்குற்றங்களுக்கு” ஆதாரம் கிடைத்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை Zelenskyy கூறினார்.
பெப்ரவரியில் ரஷ்யா படையெடுத்த பிறகு, Kherson நகரம் வீழ்ச்சியடைந்த முதல் முக்கிய நகர்ப்புற மையமாக இருந்தது.
மேற்கில் கருங்கடல் மற்றும் கிழக்கில் அசோவ் கடல் ஆகிய இரண்டிற்கும் அணுகலுடன், உக்ரைனுக்கான நுழைவாயிலாகவும் கெர்சன் நகரம் உள்ளது.
செப்டம்பரில் ரஷ்யாவின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட நான்கு உக்ரைனிய பிராந்தியங்களில் இப்பகுதியும் ஒன்றாகும். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனியப் படைகளிடம் இருந்து அவர்களைப் பாதுகாக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்துவதாக உறுதியளித்திருந்தார்.