சமீப காலமாக பொலிஸ் அதிகாரிகள் மேற்கொள்ளும் தன்னிச்சையான மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள, பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளனர்.
மனித உரிமைகளை மீறும் வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தொடர்ச்சியான சட்டவிரோத செயற்பாடுகளை அவதானித்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழல் ஜனநாயக சமூகத்தின் உயிருக்கும், நாட்டில் சட்டத்தின் ஆட்சிக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றார்கள்.
இது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கருத்து. எனவே, பொலிஸ்மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு நவம்பர் (21) திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு வருகை தருமாறு அறிவித்துள்ளது.
நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய ஒரு தரப்பினரால் இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கலந்துரையாடலின் போது, எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவர்களிற்கு ஆலோசனை வழங்கும்.