யாழில் சிரமதானத்தில் மர்மப் பொருள் வெடித்து 2 பேர் காயம்!

Date:

யாழ்ப்பாணம் – கோப்பாய், கைதடி வீதியில் இன்று காலை மர்மப்பொருளொன்று வெடித்ததில் இருவர் காயமடைந்தனர்.

நீர்வேலி பகுதியை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனமொன்று மரநடுகையில் ஈடுபடும் பொருட்டு சிரமதான பணியில் ஈடுபடும்போது மர்மப்பொருளொன்று வெடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெடிப்பு சம்பவத்தின் போது தனியார் தொண்டு நிறுவன பணியாளர்கள் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் காயமடைந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

தாங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த பகுதியில் புல்லு வெட்டும் பணியில் ஈடுபடுவதாகவும், இன்றைய தினம் வழமை போல் தாங்கள் மரம் நடுவதற்காக புல்லு வெட்டிக் கொண்டிருந்தபோது திடீரென மர்மப் பொருள் வெடித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பான தடயவியல் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலம்

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின்...

படகு கவிழ்ந்து இரு சிறுவர்கள் பலி

கற்பிட்டி களப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன்,...

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்: நிர்வாகத் தீர்மானங்கள் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கக் கூடாது

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அண்மையில் உருவாகியுள்ள நிர்வாக மற்றும் பணியாளர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்