யாழ்ப்பாணம் – மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் வாளால் வீட்டை சேதப்படுத்தி அச்சுறுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை 4 மணியளவில் வீடு ஒன்றினை முற்றுகையிட்டு அடாவடி செய்த நபர் வீட்டின் கதவுகளை வாள்களால் தாக்கியும் கற்களால் எறிந்தும் சேதப்படுத்தியுள்ளார் .
குறித்த வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப தாய் ஒருவர் மிகுந்த அச்சம் கொண்டு அயலவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
நேற்றைய தினம் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் கல்வியற்கல்லூரி மாணவர் ஒருவரே வாளுடன் வந்து அச்சுறுத்தியதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
Video Player
00:00
00:00
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.