அம்பிட்டிய பெர்வேர்ட்ஸ் கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவர் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
முறையான ஒழுக்காற்று விசாரணையை மேற்கொள்ளாமல் அதிபர் இரண்டு வாரங்களுக்கு வகுப்புத் தடை விதித்துள்ளதாகக் கூறி பாடசாலை அதிபருக்கு எதிராக உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டியில் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மாணவர் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு கலைப்பிரிவில் ஜனவரி 2023 இல் தோற்றவுள்ளார்.
பாடசாலையின் நடனக் குழுவில் அங்கம் வகிக்கும் அவர், இந்த ஒழுக்காற்று நடவடிக்கையால் நவம்பர் 6ஆம் திகதி நடைபெற்ற பாடசாலைக்களுக்கிடையேயான நடனப் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதாக அந்த மாணவர் தெரிவித்தார்.
இலங்கை ஆசிரியர் சங்கம் மாணவனுடன் முறைப்பாடு செய்யச் சென்றதுடன், இந்த மாணவனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் போது அதிபர் 2005/17 சுற்றறிக்கையின் விதிமுறைகளை பின்பற்றவில்லை என ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினர் ரேணுகா மாலியகொட தெரிவித்தார்.
இது தொடர்பில் அதிபர் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலையின் ஒழுக்காற்று சபையின் அங்கீகாரத்துடன் குறித்த மாணவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஏனைய மாணவர்களுக்கும் இந்த நடவடிக்கை எச்சரிக்கையாக அமைவதாகவும் பாடசாலை அதிபர் டி.என்.பி.எம்.தசநாயக்க தெரிவித்தார்.