காலி ஜின்தோட்டை பகுதியில் நேற்று (8) பிற்பகல் கடலில் நீராடச் சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவின்ன அரபிக் பாடசாலையில் கல்வி கற்கும் காலி ஹிரிம்புரையைச் சேர்ந்த மொஹமட் மொஹமட் யூசுப் (வயது 14) மற்றும் காலி மொரகொடையைச் சேர்ந்த மொஹமட் மில்ஷான் (15) ஆகிய இரு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த இரண்டு மாணவர்களும் தாங்கள் படிக்கும் அரபு பாடசாலைக்கு விடுமுறை விடுவதால் ஜின்தோட்டை முகத்துவாரத்திற்கு அருகில் உள்ள கடலில் நீராட வந்துள்ளனர். அவ்வாறு நீந்திக் கொண்டிருந்த இருவரும் நீரில் மூழ்கியதையடுத்து, பிரதேசவாசிகள் இணைந்து மீட்பு முயற்சியில் ஈடுபட்டனர்.
அரை மணி நேரத்தின் பின் அவர்கள் மீட்கப்பட்டனர்.
அதற்குள் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததுடன் மற்றைய மாணவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.