நெதர்லாந்திலுள்ள 53 வயது நபரொருவரைத் திருமணம் செய்யுமாறும், அவருடன் நிர்வாணமாக வீடியோ அழைப்பில் பேசுமாறும் பெற்றோர் வற்புறுத்தினர் என 15 வயதுச் சிறுமியொருவர் வழங்கிய வாக்குமூலம் தவறானது என்பது தெரிய வந்துள்ளது.
பெற்றோர் மீதான கோபத்தில் அப்படி தவறான வாக்குமூலம் வழங்கியதாக சிறுமி ஏற்றுக்கொண்டதையடுத்து, கைதாகிய பெற்றோர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 15 வயதுச் சிறுமிக்கும், கல்வியங்காட்டை பூர்வீகமாக கொண்ட பிரான்ஸை சேர்ந்த 20 வயது இளைஞனிற்குமிடையில் ஏற்பட்ட பேஸ்புக் காதல் ஏற்பட்டிருந்தது. சில காலமாக இந்த காதல் நீடித்திருந்தது.
இந்த நிலையில், பிரான்சிலிருந்து கல்வியங்காடு வந்திருந்த 20 வயதான இளைஞன், 15 வயது காதலியுடன் தலைமறைவாகியிருந்தார். இது குறித்து அச்சுவேலி பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, இருவரும் கடந்த மாதம் 27ஆம் திகதி அச்சுவேலியில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சிறுமியிடம். சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தினர், பொலிஸார் உட்பட பல தரப்பினரும் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
நெதர்லாந்திலுள்ள 53 வயதான ஒருவருக்கு தன்னை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயல்கின்றனர் என இதன்போது சிறுமி குறிப்பிட்டுள்ளார். அவருடன் ‘வீடியோ’ அழைப்பு மூலம் உரையாட நிர்ப்பந்திப்பதாகவும் தனது வாக்குமூலத்தில் சிறுமி தெரிவித்துள்ளார். அத்துடன் தன்னை நிர்வாணமாக அவருடன் ‘வீடியோ’ அழைப்பில் பேசு வதற்கு பெற்றோர் அழுத்தம் கொடுத்தனர் எனவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். சிறுமியின் பெற்றோரும் கைதாகினர்.
சிறுமி பேத்தியாரின் பராமரிப்பில் தற்காலிக மாக ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கோபத்தில் தவறான வாக்குமூலம் வழங்கியதாக சிறுமி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, நீதிமன்றத்தில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து சிறுமியின் பெற்றோர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.