ஹக்மன, கெபெலியபொலவில் உள்ள சனச வங்கிக்குள் நுழைந்த நபர் ஒருவர் வங்கியின் பெண் முகாமையாளரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
முகாமையாளரின் கணவரே அவரைக் கொன்றதாகத் தெரிகிறது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இருவருக்குமிடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகவே அவரது கணவர் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வங்கி மேலாளர் நிஷாதி கல்பானி (22), வங்கியில் தனியாக வேலை செய்ததாக பொலிசார் கூறுகின்றனர்.
சம்பவம் நடந்த போது வங்கியில் வாடிக்கையாளர்கள் யாரும் இருக்கவில்லை. படுகாயமடைந்த முகாமையாளர் ஹக்மன கங்கோடாகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைமறைவாகியுள்ள கணவரை கைது செய்ய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்