27.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இந்தியா

‘காதலில் எல்லாமே நியாயம்தான்’: பாலினத்தை மாற்றிக் கொண்டு மாணவியை திருமணம் செய்த ஆசிரியர்!

காதலிலும், போரிலும் எல்லாமே நியாயமானவைதான் என சொல்லப்படுவதுண்டு. அப்படித்தான், இந்தியாவின் ராஜஸ்தானைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவியுடனான காதலுக்காக தனது பாலினத்தை மாற்றிக் கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.

ராஜஸ்தானில் உள்ள பாரத்பூரில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியில் இருந்தவர் மீரா. அதே பள்ளியில் பயின்று மாநில அளவில் கபடி வீராங்கனையாக சிறந்து விளங்கியவர் கல்பனா பவுஸ்தர். நாளாடைவில் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், காதலி கல்பனாவை கரம் பிடிக்க தனது பாலினத்தை சிகிச்சை மூலம் மாற்றிக் கொண்டிருக்கிறார் மீரா.

”காதலில் எல்லாம் நியாயமே. அதனால்தான் நான் என் பாலினத்தை மாற்றினேன்” என்று கூறும் மீரா தன் பெயரை ஆரவ் குந்தல் என மாற்றிக் கொண்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

தொடர்ந்து பேசிய மீரா, “நான் சிறு வயதிலிருந்து என்னை ஆணாக உணர்ந்திருக்கிறேன். ஆணாக வாழவே விரும்பினேன். இதற்கான முதல் சிகிச்சை 2019 ஆம் ஆண்டு செய்தேன்” என்றார்.

கல்பனா பேசும்போது, “நான் ஆரம்பம் முதலே அவரை விரும்பினேன். அவர் ஆணாக மாறவில்லை என்றாலும் நான் அவரை திருமணம் செய்திருப்பேன். 2019 பால்மாற்று அறுவை சிகிச்சைக்கு நானும் சென்றிருந்தேன்” என்றார்.

இவர்களது திருமணம் பெற்றோர்களின் சம்மதத்திற்கு இணங்க சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.

ஜனவரி மாதம் நடக்கவுள்ள சர்வதேச கபடி போட்டிக்காக கல்பனா டுபாய் செல்ல திட்டமிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மது போதையில் மதகுரு

east tamil

​​காதலியை கொன்று உடலை பதப்படுத்தி வைத்த மருத்துவர்: 3 மாதங்களுக்கு பின்னர் சிக்கியது எப்படி?

Pagetamil

கமலின் மநீம-வில் இருந்து விலகியது ஏன்? – நடிகை வினோதினி விளக்கம்

Pagetamil

இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரி வழக்கு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Pagetamil

இலங்கையின் கடைசி தமிழ் மன்னருக்கு தமிழ்நாட்டில் அஞ்சலி

east tamil

Leave a Comment