Pagetamil
இலங்கை

உயிரிழந்த பல்கலைகழக மாணவியை கொழும்பு அதிசொகுசு பேருந்தில் ஏற வைத்த திடீர் காரணம்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணத்த போது விபத்திற்குள்ளான அதி சொகுசு பேருந்தில் உயிரிழந்த பல்கலைகழக மாணவியின் இறுதிக்கிரியைகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. அவரது மரணச்சடங்கில் கிராமமே திரண்டு அஞ்சலி செலுத்தியது.

கடந்த 5ஆம் திகதி அதிகாலையில் இந்த விபத்து சம்பவம் நடந்தது.

பருத்தித்துறையிலிருந்து புறப்பட்டு, யாழ் நகர் ஊடாக பயணித்த அதி சொகுசு பேருந்தே விபத்திற்குள்ளானது. இரண்டு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற பேருந்து வவுனியா, நொச்சிமோட்டை பாலத்தில் மோதி விபத்திற்குள்ளானது.

சாரதியின் அசண்டையே விபத்திற்கு காரணமென குறிப்பிடப்படுகிறது.

இந்த விபத்தில், யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவியான நாவலப்பிட்டிய பகுதியை சேர்ந்த இராமகிருஷ்ணன் சயாகரி (23), பேருந்து சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (32), இன்பர்சிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (24) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். 16 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

உயிரிழந்த மாணவி நாவலப்பிட்டியை சேர்ந்தவர். யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையில் கல்வி கற்றுக்கற்ற முதலாம் வருட மாணவியாவார்.

நாவலப்பிட்டி, அம்பகமுவ வீதியை சேர்ந்த அவரது குடும்பத்தினர் மிக வறுமையானவர்கள். பெற்றோர் வாய் பேச, செவித்திறன் குறைபாடுடையவர்கள். மாலை கட்டும் தொழிலில் ஈடுபட்டனர். தந்தை இராமகிருஷ்ணன் நாவலப்பிட்டி கதிரேசன் கோயிலிற்கு மாலைகள் கட்டி வழங்குகிறார்.

அந்த தம்பதியினருக்கு 3 பிள்ளைகள். அவர்களில் மூத்தவர் சயாகரி. அவர் சிறுவயதில் நடனம், கற்றலில் சிறந்து விளங்கியதாக கிராமத்தவர்கள் தெரிவித்தனர்.

சயாகரியின் எதிர்காலத்திலேயே அந்த குடும்பம் தங்கியிருந்த நிலையில், அந்த குடும்பத்திற்கு இடிபோல இந்த விபத்து அமைந்து விட்டது.

யாழ் பல்கலைகழக சித்த மருத்துவபீடத்தில் கடந்த 6 மாதங்களின் முன்பாகவே அவர் இணைந்திருந்தார்.

கொழும்பில் உறவினர் ஒருவரின் திருமணம் நடைபெறவிருந்தது. இதற்காக முன்னதாகவே சயாகரியின் தாயார் கொழும்பு சென்றார். குடும்பத் திருமணம் என்பதால் சயாகரியும் பல்கலைக் கழகத்தில் இருந்து விடுப்பு எடுத்து கொழும்பு திருமண நிகழ்விற்கு சென்றார்.

இதன்போதே இந்த அனர்த்தம் நடந்தது.

சித் வைத்தியராகி தனது பெற்றோர், சகோதரர்களை கவனித்துக் கொள்ள வேண்டுமென்ற கனவுடன் யாழ்ப்பாண பல்கலைகழகம் வந்த சயாகரி, நேற்று முன்தினம் (6) காலை சடலமாக வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அன்று மாலை நாவலப்பிட்டி பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அடையாள அட்டையின்றி பக்கத்து கடைக்கு சென்றவரை கைது செய்த பொலிசார் இடமாற்றம்!

Pagetamil

தண்டவாளத்தில் செல்பி எடுத்த தாயும், மகளும் ரயில் மோதி பலி

Pagetamil

நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை

Pagetamil

பிரித்தானியர் ஒருவரால் வந்த வினை: இலங்கையில் பேராபத்தாக உருவெடுத்துள்ள ஆபிரிக்க நத்தைகள்!

Pagetamil

2025 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்களின் விபரம்!

Pagetamil

Leave a Comment