அளுத்கம, தர்கா நகரில் உள்ள சிறிய பல்பொருள் அங்காடி ஒன்றில் காசாளராகப் பணிபுரிந்து வந்த 18 வயது யுவதியொருவர், 1.2 மில்லியன் ரூபா பணத்தை திருடிய குற்றச்சாட்டில் அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடை உரிமையாளருக்கு தர்கா டவுன் மற்றும் அளுத்கம ஆகிய இடங்களில் இரண்டு விற்பனை நிலையங்கள் உள்ளதாகவும், தர்கா டவுன் கடையிலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அளுத்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அதன்படி, தர்கா டவுனில் வசிக்கும் காசாளர் காவலில் வைக்கப்பட்டார், பின்னர் விசாரணையின் போது பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்டார்.
காசாளர் மாதாந்தம் இந்தத் திருட்டைச் செய்துள்ளதோடு, அவ்வப்போது சுமார் 700,000 ரூபாயைத் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
சந்தேக நபர் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் நாளாந்தம் சம்பாதித்த வருமானத்தில் பணத்தை எடுத்து தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டுள்ளதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பணத்தை மோசடி செய்தல் மற்றும் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நவம்பர் 6 ஆம் திகதி களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.